தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். கடந்த கோடை மிகவும் உக்கிரமாக இருந்ததால் வழக்கம் போல் ஏப்ரல் முழுவதும் இயங்கும் பள்ளிகளுக்கு 20 தேதியுடன் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது.  அதுபோல் இந்த ஆண்டு வெப்பம் தகிக்கும் என்பதால் கோடையில் ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியுடன் தேர்வுகளை முடித்துக் கொண்டு அனைத்து தனியார், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதனால் கோடை விடுமுறை 44 நாட்கள் ஆகியது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடக்கத்திலேயே வெயில் சென்ட்சுரி அடிப்பதால் ஜூன் 7-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் பேட்டி: பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து விளம்பரங்கள் வெளியிடக்கூடாது என பள்ளி கல்வி துறை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாகவும், பழுதுகள் இருந்தால் அதனை சரிசெய்தும் வைத்திருக்க வேண்டும், பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளை கிருமி நாசினி பயன்படுத்தி தூய்மையாக பராமரிக்க வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தில் புதர்கள், கழிவு பொருட்கள் இல்லாதவாறு தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்


Share this

Related Posts

Previous
Next Post »